Ashroff Shihabdeen
ஓர் அரசியல்வாதியிடம் பல்வேறு திறப்பட்டவர்கள் வருவார்கள், போவார்கள். யார் கை நீட்டினாலும் அரசியல்வாதிகள் கைகுலுக்கிக் கொள்வார்கள். அப்படியொரு நபர்தான் ஸஹ்ரானும்.ரவூப் ஹக்கீமுடைய மக்கள் சந்திப்புக்கு வந்து கைகுலுக்கிக் கொண்டால் அது பயங்கரவாதத்துடன் சம்பந்தப்பட்டது என்று சித்தரிப்பது எத்தகைய முட்டாள்தனமானது!
அப்படிப் பார்த்தால் ஸஹ்ரானுடன் மத்ரஸாவில் கற்றவர்கள், கற்பித்த ஆலிம்கள், ஸஹ்ரானின் அயலவர்கள், ஸஹ்ரானுக்கு மீன் விற்றவன், மரக்கறி விற்றவன், சுகவீனத்துக்கு மருந்து கொடுத்த வைத்தியர்கள், பார்மஸிக்காரர்கள், தபால்காரன், கடையில் தேனீர் வைத்த வெயிட்டர்கள், வாகனத்துக்குப் பெற்றோல் அடித்த ஷெட்காரர்கள் என்று எல்லாரையும் கைது செய்து அடைக்க வேண்டும். எப்படியும் இவ்வாறு சம்பந்தப்பட்ட நபர்கள் தொகை ஆகக்குறைந்த அளவு பார்த்தாலும் லட்சத்தைத் தாண்டும்.
மிப்லால் மௌலவி இவர்கள் அனைவரையும் கைது செய்யும்படி ஒரு முறைப்பாடு செய்யலாமே!