பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட மூவரை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு குறுகந்த விகாரதிபதியின் பூதவுடலை அடக்கம் செய்வது தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மீறி பூதவுடலை அடக்கியமையினால் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் அவர்களை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி ஞானசார தேரர் உள்ளிட்ட மூவரும் எதிர்வரும் 8ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்ராவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

