(எம்.எம்.ஜபீர்)
ஜனாதிபதியின் வழிகாட்டலில் நாட்டை துய்மையாக்குவோம் எனும் வேலைத்திட்டம் நாடுபூராகவும் முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கமைவாக சம்மாந்துறை பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானம் நேற்று இடம்பெற்றது.
சம்மாந்துறை ஹிஸ்புல் சமூக சேவை நண்பர்கள் ஒன்றியம் சம்மாந்துறை பிரதேச சபையுடன் இணைந்து இவ்வேலைத்திட்டத்தினை முன்னெடுத்தனர். இதன்போது பிரதேசத்திலுள்ள வடிகான்கள், வீதிகள், சுற்றுப்புறச்சூழல் என்பன துய்மையாக்கப்பட்டன.
இதில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லாபீர், சம்மாந்துறை பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஏ.அப்துல் றஸாக், அமைப்பின் உறுப்பினர்கள், பிரதேச சபை உத்தியோகதர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.