Ads Area

காத்தான்குடி மண்ணில் தலை நிமிர்ந்து நிற்கும் மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசல் விரைவில் திறப்பு.

காத்தான்குடி மண்ணில் தலை நிமிர்ந்து நிற்கும் முஸ்லிம்களின் வரலாற்று சின்னம்”


முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களினால் காத்தான்குடி பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாயல் குப்பாவுக்கான (டொம்) அலங்கார மின் விளக்குகளை பொருத்தும் பணிகள் நேற்று (15) ஞாயிற்றுக்கிழமை கலாநிதி ஹிஸ்புல்லாஹ் அவர்களின் பங்குபற்றுதலுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பலஸ்தீன் அல் அக்ஸா வளாகத்தில் அமைந்துள்ள Dome of the Rock பள்ளிவாயலின் வடிவத்தை ஒத்ததாக காத்தான்குடியில் அமைக்கப்பட்டு வரும் இப் பள்ளிவாயல் இன்ஷா அழ்ழாஹ் மிக விரைவில் தொழுகைக்காக திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-ஹம்ஸா கலீல்









Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe