தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக சிலரது துாண்டுதலினால் என் மீது சேறு பூசுவதற்காக ஏவிடப்பட்ட சிலரால் எனது வட்டார மக்களுக்கு நான் செய்யும் சேவைகளை யாரும் தடுத்து விட முடியாது என சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஏ.சி.எம். சஹீல் சம்மாந்துறை24 இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
அதிகரித்த மழை காரணமாக எனது வட்டாரத்திற்கு உட்பட்ட உடங்கா - 02 பிரதேசத்தில் உள்ள அம்பாறை 16ம் வீதியில் மழை நீர் தேங்கி அவ் வீதியில் வசிக்கும் மக்களுக்கு இடையூராக இருந்தது தொடர்பாக அப் பிரதேச மக்கள் தன்னிடத்தில் முறையிட்டார்கள், மக்களின் முறைப்பாட்டுக்கு இணங்க தான் உடனடியாக இயந்திரத்தினை வரவழைத்து குறித்த வீதியில் தேங்கி நின்ற மழைநீரை வீதியில் ஓரமாக காண் தோண்டி வெளியேற்றினேன் ஆனால் தான் செய்யாத ஒரு வேலையினை திட்டமிட்டு செய்ததாக அவ் வீதியில் வசிக்கும் சிலர் என் மீது கொண்ட தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக ஊடகங்களுக்கு பொய்யான தகவல்களை வழங்கியுள்ளனர், தான் ஆரம்பித்த வேலையானது முழுமையடையும் முன்னர் அதனை புகைப்படமெடுத்து ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளனர், என் மீது விமர்சனம் செய்வோர் நேரடியாக வந்து குறித்த வீதியினைப் பார்வையிடலாம்.