(எம்.எம்.ஜபீர்)
சம்மாந்துறை பிரதேச சபையினால் செந்நெல் கிராமத்தில் பிரதேச மக்களின் நன்மைகருதி அமைக்கப்பட்டுள்ள வாசிப்பு நிலையம் செந்நெல் சனமூக நிலையத்தின் ஏற்பாட்டில் (18) நேற்று திறந்து வைக்கப்பட்டது.
சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அம்பாரை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபி பிரதம அதிதியாக கலந்துகொண்டு வாசிப்பு நிலையத்தை திறந்து வைத்தார்.
சம்மாந்துறை செந்நெல் கிராம மக்களின் நீண்டகாலமாக தேவையான வாசிப்பு நிலையம் இல்லாமையினால் பாடசாலை மாணவர்கள், இளைஞர், யுவதிகள், பிரதேச மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாக விடுத்த கோரிக்கைக்கமைவாகவே வாசிப்பு நிலையம் மக்கள் பாவனைக்காக திறந்து கையளிக்கப்பட்டுள்ளது.
இதன்போது வாசிப்பு நிலைய பிரதேசத்தினை அழகுபடுத்தும் நோக்கில் மரம் நடுகை நிகழ்வு இடம்பெற்றது.