திறனொளி கலை கலாசார ஊடக வலையமைப்பின் கலாசார விழுமிய செயற்பாடாக இறை இல்லங்களில் கடமையாற்றும் அதான் அழைப்பாளரகளுக்கான பயிற்சி செயலமர்வும் மார்க்க சொற்பொழிவும் அண்மையில் சம்மாந்துறை ஜலாலியா ஜூம்ஆ பள்ளிவாசலில் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அறிவிப்பாளர் ஏ.ஸி.நவ்சாட் தலைமையில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.
அல்-ஹாபிழ் மௌலவி பஸீல், கலாசார உத்தியோகத்தர; றஸ்மி மூஸா (ஸலபி) ஆகியோர; விஷேட மார்க்க சொற்பொழிவினை நிகழ்த்தியிருந்தனர;. ஜலாலியா ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் திறனொளி கலை மன்ற ஆலோசனை சபை உறுப்பினர் எம்.முஸம்மில் (அதிபர்), நம்பிக்கையாளர் சபை நிருவாக உறுப்பினர் எம்.எச்.எம்.ஹாரிஸ், திறனொளி பிரதி நிதிகளான பீ.எம்.பர்ஹானுதீன், ஏ.எல்.நளீம், எம்.எச்.முனீர;, ஏ.எல்.எம்.மர்சூக், என்.எம்.சர்பான் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்களில் கடமையாற்றும் முஅத்தின்கள் வருகை தந்து பயன் பெற்றனர;.
இவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வுகள் விரைவில் நடாத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
நன்றி - ஆசாத் இணைய வானொலி - சம்மாந்துறை.