காரைதீவு - சகா.
சம்மாந்துறை கல்வி வலைய அதிபர்-ஆசிரியர்களுக்கு கல்விப் பணிப்பாளர் விடுத்துள்ள கண்டிப்பான உத்தரவு.
அதிபர்கள், ஆசிரியர்கள் தகுந்த காரணமின்றி ,பாடசாலைக்கு வெளியே செல்லுதல் கண்டிப்பாகத் தவிர்க்கப்படல் வேண்டுமென, மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் பாடசாலை நேரத்தில், அதிபர், ஆசிரியர்கள் வலயக் கல்வி அலுவலகத்துக்கு வருவதை தடை செய்வதாகவும் வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.