Ads Area

சவுதி இளவரசரையும், புனித கஃபாவினையும் முகநுாலில் கொச்சையாக பேசியவர் சவுதியில் அதிரடி கைது.

தகவல் - சம்மாந்துறை அன்சார்.

சவுதி அரேபியா தமாம் நகரில் ஏசி டெக்னிசியனாக பணிபுரிந்து வந்த இந்தியாவைச் சேர்ந்த ஹரிஸ் பங்கரா - Harish Bangera என்ற நபர் சவுதி அரேபியில் இருந்து கொண்டே சவுதி  அரேபிய முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் அவர்களையும், முஸ்லிம்களின் புனித்தளமான கஃபாவினையும் முகநுாலில் கொச்சையாக எழுதி பதிவுகள் இட்டிருந்த நிலையில் தற்போது அவர் சவுதி அரேபிய பொலிஸாரினால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்தியாவைச் சேர்ந்த ஹரிஸ் பங்கரா - Harish Bangera  என்ற அந்த நபர் தீவிர மோடி பக்தராகவும், RSS அமைப்பின் தீவிர ஆதரவாளராகவும் தன்னைப் பற்றி முகநுாலில் விபரித்துள்ளார்.

சவுதி அரேபிய முடிக்குரிய இளவரசரையும், கஃபாவினையும் கொச்சைப்படுத்திய குறித்த நபரை அவர் பணிபுரிந்து வந்த நிறுவனமும் பணியிலிருந்து நிறுத்தியமை குறிப்பிடத் தக்கதாகும்., 











Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe