Ads Area

டெல்லி வன்முறை: உயிரிழப்பு 9 ஆக உயர்வு - துணைராணுவம் குவிப்பு.

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தால் மூன்றாவது நாளாக வன்முறை நீடித்து வருகிறது. நிலைமையை கட்டுப்படுத்த மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவசர ஆலோசனை நடத்தினார்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் ஷாகீன் பாக் போராட்டத்தைத் தொடர்ந்து, ஜாஃபராபாத், மாஜ்பூர் ஆகிய இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

போராட்டத்தின் போது, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரானவர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இரண்டாவது நாளாக நேற்று நடைபெற்ற வன்முறையில் தலைமைக் காவலர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, வடகிழக்கு டெல்லியில் ஒரு மாத காலத்துக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கர்தாம்பூரி பகுதியில் இன்று மீண்டும் வன்முறை ஏற்பட்டது. இதில், துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறின. இதேபோல, பஜன்புரா சவுக் அருகே கல்வீச்சு சம்பவங்களும் அரங்கேறின. இதனால், டெல்லியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

News18 Tamil Nadu
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe