கொழும்பு-கோட்டை- இலங்கை மத்திய வங்கியின் கட்டிடத்திலிருந்து கீழே விழுந்து இளைஞன் ஒருவன் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
இன்று பிற்பகல் 3 மணி அளவில் குறிப்பிட்ட 16 வயது இளைஞன் கட்டிடத்திலிருந்து கீழே பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பிந்தி வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சட்ட வைத்தியரின் விசாரணைக்கு பின்னர் குறித்த சடலத்தை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.