சிரிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து பொதுத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எவ்வித பேச்சும் நடத்தப்படவில்லையென மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இதேவேளை பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி ஊடாகவே ஜே.வி.பி. போட்டியிடும் என்றும் அக்கட்சியால் இன்று (24) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி உட்பட எமது கொள்கையுடன் இணங்கக்கூடிய சிவில் அமைப்புகளையும் இணைத்துக்கொண்டு, பரந்தப்பட்ட கூட்டணியை அமைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் –
இது தொடர்பில் ஜே.வி.பியால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில்,
” மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிவில் அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து பொதுத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் சிரிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பரீசிலித்துவருகின்றது. இதற்கான பேச்சும் நடத்தப்பட்டுவருகின்றது என்று ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தகவலில் எவ்வித உண்மையும் இல்லை. அது ரவூப் ஹக்கீமின் தனிப்பட்ட கருத்தாகும். கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸன் ஆகியவற்றுடன் எவ்வித பேச்சுகளையும் ஜே.வி.பி. நடத்தவில்லை.
நன்றி - சிவ ராமசாமி