தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவில் வாகனம் ஓட்டும் இலங்கை-இந்திய சகோதரர்களது கவனத்திற்காக இச் செய்தியினை சம்மாந்துறை24 இணையத்தளம் வழங்குகின்றது.
சவுதி அரேபிய அரசு வாகன ஓட்டுனர்களின் நன்மை கருதி பல்வேறு வீதிப் போக்குவரத்து சட்ட திட்டங்களை அமுல்படுத்தி வருகின்றது. விபத்துக்களில் இருந்து ஓட்டுனர்களை பாதுகாக்கும் பொருட்டே இச் சட்டதிட்டங்களை அமுல்படுத்தி அதனை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
01. சிவப்பு சமிக்ஞைகளில் (Running red signals) போது வாகனம் ஓட்டினால் மற்றும் தவறான பாதையில் (wrong-way) வாகனம் ஓட்டினால் 6 ஆயிரம் றியால்கள் தண்டப்பணம் செலுத்த வேண்டும்.
02. போலியான நம்பர் பிளேட்களை (using wrong number plates) பாவித்தால் 10 ஆயிரம் றியால்கள் அபராதம்..
03. இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு 100 - 150 றியால்கள் வரை அபராதம்..
04. வாகனங்களில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு இருக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாது விட்டால் 300 - 500 றியால்கள் வரை அபராதம்.
06. 20 மீட்டர் துாரத்திற்கு அதிகமான அளவு வாகனத்தை திருப்புவது - ரிவேஸ் (reverse) எடுத்தால் 150 - 300 றியால் அபராதம்.
07. வாகனத்தில் இருந்தவாறு வீதியில் குப்பைகளை வீசினால் 300 - 500 றியால்கள் அபராதம்.
08. வாகனத்தில் அதிக ஒலியெழுப்பினால் ( சத்தம்) 150 றியால் - 300 றியால்கள் வரை அபராதம்.
09. No Parking வாகனங்களை நிறுத்துவதற்கு நியமிக்கப்படாத இடங்களிலும், மாற்றுத் திறனாளிகளுக்காக நியமிக்கப்பட்ட இடங்களிலும் வாகனங்களை நிறுத்தினால் 150 - 300 றியால்கள் வரை அபராதம்.
10. வாகனத்தை ஓட்டுபவர் மற்றும் முன் இருக்கையில் அமர்ந்து வருவோர் ஆகியோர் சீட் பெல்ட் அணியாது விட்டால் 150 - 300 றியால்கள் அபராதம் மற்றும் 24 மணித்தியாலத்திற்கு சாரதி அனுமதிப்பத்திரம் ரத்துச் செய்யப்படும்.
11. வாகன சாரதி அனுமதிப்பத்திரம் (ரைவிங் லைசன்ஸ்) இல்லா விட்டால் 150 - 300 றியால்கள் அபராதம்.
ஆகவே...சவுதி அரேபியாவில் பணிபுரியும் இலங்கையர்கள் சவுதி அரேபிய வீதிப் போக்குவரத்து சட்டதிட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என வேண்டிக் கொள்ளப்படுகின்றீர்கள்.
செய்தி மூலம் - http://www.saudigazette.com.sa
செய்தி மூலம் - http://www.saudigazette.com.sa