நித்தவூர், அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பதில் அதிபராக செயற்பட்டு வந்த ஏ.அப்துல் கபூர் (இலங்கை அதிபர் சேவை - தரம் 1) அவர்கள் இன்று (25) முதல் இப்பாடசாலைக்கான நிரந்தர அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனமானது இன்றைய தினம் கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
எமது கல்லூரியின் நிலையான புதிய அதிபர் ஏ.அப்துல் கபூர் அவர்களின் சேவை சிறக்க நிந்தவூர்டுடே வாழ்த்தி வரவேற்கின்றது.
நிந்தவூர் டுடே.