தாய் ஒருவர் தனது மகனுக்கு சூடு வைத்த சம்பவம் காத்தான்குடியில் இடம்பெற்றுள்ளது. காத்தான்குடி இரண்டாம் குறிச்சி ஊர்வீதியில் வசித்து வரும் சிறுவன் ஒருவன் தனது தாயினால் சூடு வைக்கப்பட்டதால் ஏற்பட்ட காயங்களுடன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இன்று (25) அனுமதிக்கப்பட்டுள்ளான்.
இதனையடுத்து குறித்த பாடசாலை அதிபரும் அங்கு கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரும் மாணவனின் வீட்டுக்கு சென்று சிறுவனை பார்க்க முற்பட்டபோது முதல் மறுத்த தாய், பின்னர் மகனை காண்பித்துள்ளார்.
பலத்த காயங்களுடன் காணப்பட்ட சிறுவனை அழைத்துக் கொண்டு அதிபரும் ஆசிரியரும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு சென்று சிறுவனை அனுமதித்துள்ளனர்.
இது தொடர்பில் அதிபர் தெரிவிக்கையில்,
கடந்த சனிக்கிழமை சிறுவன் குர்ஆன் மதரஸாவுக்கு செல்லாமல் தூக்கத்தில் இருந்துள்ளான். இதன் போது சிறுவனின் தாய் சிறுவனை குர்ஆன் மதராஸாவுக்கு செல்லுமாறு வற்புறுத்த சிறுவன் அங்கு காணப்பட்ட மின்னழுத்தியை தூக்கி எறிந்துள்ளான். இதையடுத்து ஆத்திரமடைந்த தாய் மின்னழுத்தியை சூடாக்கி சிறுவனின் உடம்பின் பல இடங்களில் சூடு வைத்துள்ளார். இதனால் சிறுவன் படுகாயமடைந்த நிலையில் காணப்படடதாகவும் அதிபர் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று தினங்களாக எந்தவொரு சிகிச்சையும் சிறுவனுக்கு செய்யாமல் வீட்டுக்குள்ளேயே வைத்திருந்ததாகவும் தெரிய வருவதாகவும் அதிபர் தெரிவித்தார்.. இச் சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிருவாகம் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் சட்ட நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நன்றி - மெட்ரோ நிவுஸ் (காங்கேயனோடை நிருபர்)
நன்றி - சித்தீக் காரியப்பர்.
நன்றி - சித்தீக் காரியப்பர்.