Ads Area

இலங்கையின் எதிர்கால மாற்றத்திற்கான சமூக சேவை அமைப்பினால் மாற்றுத் திறனாளிகள் மாணவா்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.

2018.09.14, 2018.11.02 கடந்த கால வரலாற்று பதிவில் இருந்து நேற்று (23) சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமாகும் இத்தினத்தில் இவர்கள் விடயத்தில் அதிகம் அக்கறை கொள்வோம்..!

இலங்கையின் எதிர்கால மாற்றத்திற்கான சமூக சேவை அமைப்பினால் மாற்றுத் திறனாளிகள் மற்றும் விஷேட தேவையுடைய மாணவா்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வுகள் இலங்கையின் எதிர்கால மாற்றத்திற்கான அமைப்பின் தலைவர் முஸ்தபா முபாறக் தலைமையில் இரண்டு கட்டங்களில் 2018.09.14 2018.11.02 சாய்ந்தமருது றியாலுல் ஐின்னா வித்தியலாயத்தில் நடை பெற்றது.

இன் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம். ஜெளபர் அவர்களும் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் சமூக சேவை உத்தியோகத்தா் அஹமட் சபீர் அவா்களும் கௌரவ அதிதியாக சாய்ந்தமருது றியாலுல் ஐின்னா வித்தியலாயத்தின் அதிபர் சம்சுத்தீன் அவா்களும், பாடசாலையின் பிரதி அதிபர், விஷேட தேவையுடைய மாணவா்களுக்கு கற்பிக்கும் ஆசிரியா்கள் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் சமூக சேவை பிரிவில் கடமை புரிகின்ற அபிவிருத்தி உத்தியோகத்தா்கள், இலங்கையின் எதிர்கால மாற்றத்திற்கான அமைப்பின் செயலாளர், பொருளாளர், பிரதி தலைவர், கணக்காளர், நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் விஷேட தேவையுடைய மாணவா்களும் இன் நிகழ்வில் கலந்து கொண்டாா்கள்.


இது தொடர்பான ஆதாரங்கள் பத்திரிகை செய்திகளிலும் அமைப்பு பதிவு புத்தகம் (LOG BOOK) உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த பதிவு தன்னையும், தங்களுடைய சமூக பணிகளை தவறான பார்வையில் விமர்சனம் செய்கின்றவர்களுக்கு சமர்ப்பணம்.

முஸ்தபா முபாறக்
தலைவர்,
இலங்கையின் எதிர்கால மாற்றத்திற்கான சமூக சேவை அமைப்பு, ஸ்ரீ லங்கா
23.02.2020






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe