(காரைதீவு நிருபர் சகா)
தமிழா ஊடகவலையமைப்பின் ஏற்பாட்டில் சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனை ஒத்துழைப்புடன் சம்மாந்துறை அப்துல் மஜீட்மண்டப பாவலர் பஸீல் காரியப்பர் அரங்கில் இன்று (24) திங்கட்கிழமை மாணவர் கவியரங்கம் இடம்பெறவிருக்கிறது.
இலக்கியத்தினூடாக இன நல்லிணக்கம் காண்போம் என்ற மகுடத்தின் கீழ் 'விழவிழ எழு வீறுகொண்டுநட' எனும் தலைப்பிலான இம் மாணவர் கவியரங்கம் சர்வதேச புகழ்பெற்ற தென்னிந்திய கவிஞர் வித்யாசாகர் தலைமையில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா முன்னிலையில் நடைபெறவுள்ளது. கவிஞர் விதயாசாகர்எழுதிய ' ஞானமடா நீ எனக்கு " என்ற என்ற வெளியீட்டுவிழாவும்இடம்பெறும்.
பசீல் காரியப்பர் நினைவுப்பேருரையை முன்னாள் பதிவாளர் மன்சூர் ஏ காதிர் நிகழ்த்துவார் என ஏற்பாட்டாளரான தமிழா ஊடகவலையமைப்பின் பணிப்பாளர் செ. முகமட்ஜலீஸ் தெரிவித்தார்.