Ads Area

கட்டாரிலிருந்து விடுமுறை வந்து மீண்டும் கட்டார் செல்ல விமான நிலையம் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் சம்மாந்துறை நபர் ஒருவர் மரணம்.

கட்டாரிலிருந்து விடுமுறைக்கு சம்மாந்துறை வந்து மீண்டும் கட்டார் செல்ல விமான நிலையம் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் சம்மாந்துறை நபர் ஒருவர் மரணம்.

கட்டார் நாட்டிலிருந்து விடுமுறை நாட்களை குடும்பத்தினருடன் கழித்துவிட்டு மீண்டும் கட்டார் நாட்டிற்கு பயணம் மேற்கொள்வதற்காக சம்மாந்துறையில் இருந்து விமான நிலையத்தை நோக்கி வேனில் சென்ற போது இவ் விபத்து நிகழ்ந்துள்ளது.

இன்று அதிகாலை ஐந்தரை மணி அளவில் குருணாகலை தம்புள்ளை வீதியில் மெல்சிரிபுற எனுமிடத்தில் இவ் விபத்துச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. இவ் விபத்தில் சம்மாந்துறை நபர் ஒருவர் மரணித்ததோடு மரணித்தவரோடு பயணம் செய்த ஏனையவர்கள் காயங்களுடன் குருநாகலையை அண்மித்த வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் மரணித்தவரின் உடல் மெல்சிரிபுறவை அண்மித்த பொல்கொல்ல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மரணித்தவர் சம்மாந்துறை மபாசா பள்ளிவாசல் மஹல்லாவைச் சேர்ந்த ஜெமீல் மௌலவி என தெரியவருகிறது.

சம்மாந்துறையிலிருந்து விமான நிலையம் நோக்கி புறப்பட்ட குறித்த வேன் பஸ் ஒன்றுடன் மோதியே இவ் விபத்து இடம் பெற்றுள்ளது.

தகவல் - தௌபீக் மொஹமட் அலியார்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe