Ads Area

ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கள் நேர்முகப்பரீட்சைக்கு தயார் படுத்த வேண்டிய ஆவணங்கள்.

பல்நோக்கு அபிவிருத்திச் செயலணியின் ஊடாக 100,000 வருமானம் குறைந்தவர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நேர்முகப்பரீட்சை – 2020.

1. ஆளடையாளத்தை உறுதிப்படுத்தக் கூடிய தேசிய அடையாள அட்டை /கடவுச் சீட்டு / வாகன சாரதி அனுமதிப் பத்திரம் இவற்றில் ஒன்றையாவது எடுத்து வருவதுடன் அதன் கிராம உத்தியோகத்தரால் உறுதிப்படுத்தப்பட்ட பிரதியொன்று,

2. பிறப்புச் சான்றிதழ் பிரதி.

3. பாடசாலை விடுகைப்பத்திரம். (அதனைப் பெற்றுக் கொள்ள இயலாதவிடத்து இறுதியாக கற்ற பாடசாலை அதிபரினால் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்)

4. கிராம உத்தியோகத்தரினால் NS – 4 படிவத்தில் வழங்கப்படும் 06 மாதங்களுக்குள் பெற்று கொள்ளப்பட்ட வதிவிட குணநலச்சான்றிதழ் மற்றும் அதன் உறுதிப்படுத்தப்பட்ட பிரதியொன்று.

5. விண்ணப்பதாரி அல்லது விண்ணப்பதாரியின் குடும்பத்தவர் சமுர்த்தி பயனாளி என்பதனை உறுதி செய்யும் பிரிவுக்குரிய சமுர்த்திஅபிவிருத்தி உத்தியோத்தரால் உறுதிப்படுத்தப்பட்ட கடிதம் (மாதிரி இணைப்பு – 02) (சமுர்த்தி பயனாளியெனின் அதற்குரிய சமூர்த்தி வங்கிக் கணக்கு புத்தகத்தையும் அதன் பெயர் தெரியத்தக்க பக்கமொன்றின் பிரதியொன்றையும் கொண்டு வருதல் வேண்டும்.

6. விண்ணப்பதாரி அல்லது விண்ணப்பதாரியின் குடும்பத்தார் சமுர்த்திபயனைப் பெற தகமையுடையோர் எனின் அதனை உறுதிப்படுத்தும் கிராம உத்தியோகத்தர் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகாத்தர்களால் உறுதிப்படுத்தப்பட்ட கடிதம்.

7. விண்ணப்பதாரி 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகளைக் கொண்ட விதவையெனின் அதனை உறுதிப்படுத்தும் கிராம உத்தியோகத்தரின் கடிதம்.
8. விண்ணப்பதாரியின் குடும்பத்தில அங்கவீனர்களான உறுப்பினர் இருப்பின் அது குறித்து கிராம உத்தியோகத்தர் மற்றும் சமூக சேவை உத்தியோகத்தர்களால் ஒப்பமிடப்பட்ட கடிதம்.

9. விண்ணப்பதாரி வயதான நோயாளியான (60 வயதிற்கு மேற்பட்ட) பெற்ரோரையும் மேலதிக தங்கி வாழ்வோரையும் கொண்டிருப்பின் அது குறித்த கிராம சேவை அலுவலர்களின் உறுதிப்படடுத்தல் கடிதம்.

10. விண்ணப்பதாரியின் குடும்பத்தின் மாதாந்த வருமானத்தை உறுதிப்படுத்தும் கிராம உத்தியோகத்தரின் கடிதம்.

11. பிரதேச சிரமதான மற்றும் சமூக சேவை நிகழ்ச்சிகளில் பங்குபற்றியிருப்பின் அது குறித்த சான்றிதழ்கள் அல்லது கிராம உத்தியோகத்தரின் உறுதிப்படுத்தல் கடிதம்.

12. பிரதேச, மாகாண மற்றும் தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் பெற்ற சான்றிதழ் மற்றும் அவற்றில் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகள்.

13. விண்ணப்பதாரி சிறிய உடல் குறைபாடு /அங்கவீனம் உடையவராயின் அது குறித்த உறுதிப்படுத்தப்பட்ட வைத்திய அறிக்கை மற்றும் அதன் பிரதி.

புதன்கிழமை (26.02.2020) முதல் நேர்முகப்பரீட்சை ஆரம்பமாக இருப்பதனால் விண்ணப்பித்த தரம் 8 தகைமையுடையவர்கள் மேற்படி ஆவணங்களை தயார் செய்து வைத்துக் கொள்ளும் படி கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

Thanks Rizvi Hussain
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe