Ads Area

இந்தியாவின் 2வது Corona மரணத்திலிருந்து நாம் படிக்க வேண்டிய சில கடினமான பாடங்கள்.

இந்தியாவின் 2வது Corona மரணத்திலிருந்து நாம் படிக்க வேண்டிய சில கடினமான பாடங்கள். (கட்டாயம் வாசிக்கவேண்டிய பதிவு)

இந்தியா பதிவு செய்திருக்கும் இரண்டாவது கொரோனா தொற்று மரணம் 13-03-2020 புதுடில்லியில் நிகழ்ந்தது மரணமடைந்த 69 வயது பெண்மணி எந்த ஒரு கொரோனா தொற்று பரவும் நாட்டுக்கும் பயணம் செய்தவர் அல்லர்

மாறாக பிப்ரவரி 5 முதல் பிப்ரவரி 23 வரை ஸ்விட்சர்லாந்து மற்றும் இத்தாலிக்கு தொழில்முறை பயணம் சென்று திரும்பிய அவரது மகன் எந்த வித நோய் அறிகுறியும் இல்லாமல் பிப்ரவரி 23 ஆம் தேதி இந்தியா வந்தடைகிறார்.

வந்து தனது தாயை சந்திக்கிறார்.

மார்ச் ஏழாம் தேதி இருவருக்கும் கொரோனாவின் அறிகுறிகள் ஏற்பட மருத்துவமனையில் சென்று சேர்கின்றனர். இருவரில் மூத்தவரும் முதியவரும் கூடவே நீரிழிவு ரத்த கொதிப்பு உடன் இருந்த அவரது தாயார் நேற்று நுரையீரல் தொற்று முற்றி மரணடைகிறார்

இதில் நாம் யாரைக் குறை கூறுவது??

இறந்த பெண்ணின் மகன் இத்தாலி நாட்டில் இருந்த போது அங்கு வெறும் 79 நோய் தொற்றாளர்களும் இரண்டு மரணங்கள் மட்டுமே நிகழ்ந்திருந்தன. ( பிப்ரவரி 22 இத்தாலி கோவிட் நிலவரம்)

இத்தாலியில் நிலைமை அபாயகரமானது அதற்கடுத்த பத்து நாட்களுக்கு பிறகு தான்.அதாவது மார்ச் ஒன்றுக்கு பிறகு அதிக மரணங்கள் ஏற்பட ஆரம்பித்தன. அதற்கு பிறகுதான் உலகம் இத்தாலியை பெரும் அச்சுறுத்தலாக பார்க்க ஆரம்பித்தது.

இந்த நிகழ்வில் இருக்கும் முக்கிய பாடங்கள்

இனியாவது தேவையற்ற பயணங்களை தவிர்த்தல் வேண்டும்.

செய்து திரும்பியவர்கள்/ திரும்புபவர்கள் தயவு செய்து தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

(mild infection) தாய்க்கு தீவிரமான தொற்றும்(Critical) ஏற்பட்டதை கண்கூடாக பார்க்கிறோம்

இதுபோன்ற நிகழ்வுகள் இனியும் நடக்காமல் இருக்க நாம் எச்சரிக்கையோடு நடக்க வேண்டும்

நன்றி:- Dr.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe