Ads Area

நிந்தவூர் உலமா சபை மற்றும் பிரதேச சபையின் கவனத்திற்கு.!

தற்போது நாடில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக பாடசாலைகள், மார்க்க வழிபாட்டுஸ்தலங்கலென அனைத்தும் மூடப்பட்டுள்ளததோடு மக்கள் பொது இடங்களில் கூட்டம் கூட்டமாக நிற்பதையும் அரசாங்கம் தற்காலிய தடை விதித்துள்ளது.
விடையத்துக்கு வருவோம்.!

ஊருக்குள் யாசகம் ( ஹதிய ) கேட்டு வீடு வீடாக வருகின்றவர்களை முற்றாக அல்லது தற்காலிய தடை விதிக்க வேண்டும். இவ்யாகர்கள் எங்கிருந்து வருகின்றார்கள் எங்கெல்லாம் செல்கின்றார்கள் என்பது யாருக்கும் தெரியாது. சில வேளை இவர்கள் முலமாக இந்நோய் தொற்றுவதற்கு வைப்புக்கள் ஏற்படலாம்.

அத்தோடு ஊருக்குள் வரும் சில யாசகர்களினால் பல பிரச்சனைகளும் ஏற்படுகின்றது சில வீடுகளில் பெண்கள் தனியாக இருக்கும் போது திடகாத்திரமான யாசகர்களும் வருகின்றனர் இவர்களினால் எமது பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லையென்பதே எமது கருத்தகும்.

அமையில் நான் அறிந்த வகையில் எமது நிந்தவூரில் கணவனை இழந்த பொண் ஒருவர் மதிய நேரம் தமது வீட்டு பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது தடீரென ஒரு 'யாசகர் வீட்டு அறைக்குள் நுழைந்ததும் அப்பெண் பயந்து விழுந்தடிச்சி ஓடி பக்கத்து வீட்டாரின் உதவியுடன் வந்து யசகரை பிடித்து கேட்டதும் அவர் கூறினாராம் அந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்புகிறேன் எனக்கு மணம் முடித்து தரும்படி கூறினாராம். இது அவர் தப்பிக்க ஒரு வழியாகத்தான் இக்கதை கூறினாரென்பது கருத்தாகும்.

மேலும் இதுபோன்ற பிரச்சனைகள் ஊருக்குள் வராதிருக்க நிந்தவூர் பெரிய ஜும்மா வள்ளிவாசல் உலமா சபை இதற்கொரு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மக்கள் சார்பாக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

முஹம்மட் ஜெலீல்,
நிந்தவூர்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe