கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கத்தாரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் ஐவேளைத் தொழுகைகள் மற்றும் ஜும்ஆத் தொழுகை போன்றவற்றை இன்றைய தினம் லுஹர் தொழுகை முதல் மறு அறிவித்தல் வரை நிறுத்தும் படி இஸ்லாமிய விவகார அமைச்சு (Awqaf ) அறிவுறுத்தல் விடுத்துள்ளது. தினந்தோறும் பிரார்த்தனைகளில் ஈடுபடும் வழிபாட்டாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா பாதிப்பு கட்டாரில் அதிகரித்து காணப்படுகிறது இதுவரை 400 பேருக்கு மேட்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கதாகும். (Qatar Tamil)