சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைத்தியசாலைக்குள் வருகின்ற, வைத்தியசாலையிலிருந்து வெளியேறுகின்ற வழிகள் அனைத்திலும் கைகளை கழுவிக் கொள்வதற்கான வசதிகள் இப்போது ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. அதே போல் கை கழுவுவதை ஊக்குவிக்கின்ற அறிவித்தல்களும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கின்றன.
வைத்தியசாலைக்குள் வருகின்றவர்கள் போகின்றவர்கள் எல்லோரும் கட்டாயம் கைகளை கழுவுக்கொள்வதை உறுதிப்படுத்துவதற்காக இந்த இடங்களில் ஒரு பாதுகாப்பு உத்தியோகத்தரும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இது ஏனைய அலுவலகங்களும், நிறுவனங்களுக்கும் பின்பற்றக் கூடிய நல்லதொரு முன்மாதிரியான செயற்பாடாகும்.
நன்றி - வைத்தியர் அர்ஷத் அஹமட்
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை.