அனைத்து தேவாலயங்களிலும் ஞாயிறு ஆராதனைகள் உள்ளிட்ட, மக்கள் அதிகளவில் பங்குபற்றும் ஆராதனைகள் மற்றும் வழிபாடுகளை தவிர்க்குமாறு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இம்மாதம் இறுதி வரை, குறித்த நடைமுறையை பின்பற்றுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.