நூருள் ஹுதா உமர்.
விஞ்ஞான ஆராய்ச்சி போட்டியில் சர்வதேச விருது வென்ற மாணவி பார்த்திமா ஷைரீன் இனாம் மௌலானாவை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு மருதம் கலைக்கூடல் மன்ற ஏற்பாட்டில் நேற்று (02) மாலை மாளிகைக்காடு பாவா ரோயல் மண்டபத்தில் நடைபெற்றது.
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளரும் முன்னாள் சாய்ந்தமருது, அக்கரைப்பற்று பிரதேச செயலாளருமான ஏ.எல்.எம். சலீம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சரும், தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள் கலந்து கொண்டார்.
மேலும் கௌரவ அதிதியாக தேசிய காங்கிரசின் சிரேஷ்ட பிரதி தலைவரும், இராஜாதந்திரியுமான வைத்தியர் ஏ. உதுமாலெப்பை அவர்களும் விசேட அதிதிகளாக தேசிய காங்கிரசின் முக்கியஸ்தர்கள், மருதம் கலை கூடல் மன்ற தலைவர், செயலாளர், உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், கல்விமான்கள், வர்த்தக பிரதிநிதிகள், பிரதேச இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.