Ads Area

சவுதி அரேபியாவில் நிரந்தர வதிவிட அனுமதி (Saudi Green Card) பெற்றார் LuLu யூசுப் அலி.

தகவல் - சம்மாந்துறை அன்சார்

பல நாடுகளில் கிளைகளைக் கொண்ட மிகப் பெரும் நிறுவனமான லுலு (LuLu) குழுமத்தின் தலைவர் M.A. யூசுப் அலி வெளிநாட்டினருக்கான சவுதி அரேபியாவின் நிரந்தர வதிவிட அனுமதிப்பத்திரத்தைப் (Saudi Green Card) பெற்றுள்ளார்.


வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் வகையில் கடந்த நவம்பர் 2019 இல், சவுதி அரேபியா 73 வெளிநாட்டினருக்கு நிரந்தர வதிவிடத்தை வழங்க முன் வந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் சவுதி அரேபியாவில் சொத்துக்களை வாங்கவும், சவுதி ஸ்பான்சர் (கபீல்) இல்லாமல் வர்த்தகம் செய்யவும் அனுமதியளித்தவது.

இத் திட்டமானது சவுதி அரேபியாவின் பொருளாதாரத்தை முன்னேற்ற சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முஹம்மட் பின் சல்மான் அவர்களின் 2030 திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இதனடிப்படையிலேயே சவுதி அரேபியாவின் நிரந்தர வதிவிட அனுமதிப்பத்திரத்தைப் (Saudi Green Card) M.A. யூசுப் அலியும் பெற்றுக் கொண்டார் அரேபியாவின் நிரந்தர வதிவிட அனுமதிப்பத்திரத்தை பெறும் முதல் இந்தியர் LuLu குழுமத்தின் தலைவர் M.A. யூசுப் அலியாகும் மேலும் இவர் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நீண்டகால குடியிருப்பு அட்டையான UAE’s Gold Card long-term residency விசாவினையும் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

இது குறித்து கருத்துச் தெரிவித்த யூசுப் அலி அவர்கள்

இது என் வாழ்க்கையில் மிகவும் பெருமை மிகுந்த தருணமாகும் இது எனக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்திய வெளிநாட்டினருக்கும் ஒரு பெரிய மரியாதையையும், கௌரவத்தையும் பெற்றுத் தந்துள்ளது. இதற்காக சவுதி அரேபிய அரசுக்கும், மன்னர் சல்மான் மற்றும் முடிக்குரிய இளவரசர் முஹம்மட் பின் சல்மான் ஆகியோருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.








Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe