கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை உடன் மூடுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். கொரோனா தடுப்பு பிரிவுடன் இன்று இடம்பெற்ற விசேட கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அதற்கமைய இன்று முதல் இரண்டு வாரங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் எந்தவொரு விமானங்களையும் தரையிறங்குவதற்கு அனுமதி வழங்காமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் இந்தியாவின் தம்பதிவ சுற்றுலா பயணம் மேற்கொண்ட இலங்கையர்கள் 1200 பேரை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.