8 பிள்ளைகளை ஹாபிழ்களாகவும் மெளலவிகளாகவும் உருவாக்கிய காத்தான்குடி ஹனீபா Sir கெளரவிக்கப்பட்டார்..!
மஞ்சந்தொடுவாய் அல் மத்ரஸத்துல் கரீமிய்யா அல் குர் ஆண் மத்ரஸா மாணவர்களின் முப்பெரும் விழாக்கள் சனிக்கிழமை (14) முஹியித்தீன் ஜும் ஆ பள்ளிவாயலின் தலைவர் யூ.எல்.ஏ.முஹைதீன் அவர்களின் தலைமையில் மஞ்சந்தொடுவாய் முஹியித்தீன் ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றது.
இந்த விழாவில் காத்தான்குடியிலும் தேசியத்திலும் தீனுக்காக தபலீக் ஜமாஅத்தில் இனைந்து மிக நீண்ட காலமாக பணியாற்றி வரும் ஒய்வுபெற்ற ஆசிரியர் ஹனீபா Sir கெளரவிக்கப்பட்டார்.
இவருக்கு 8 பிள்ளைகள். 6 பெண் பிள்ளைகளும் 2 ஆண் பிள்ளைகளுமாகும். எட்டு பிள்ளைகளுமே ஆலிம்களும் ஆலிமாக்களூமாகும் இதில் இரண்டு ஆண் பிள்ளைகளும் நான்கு பெண் பிள்ளைகளும் குர்ஆனை மணனம் செய்தவர்களாகும்.
இவருடைய மருமக்களும் ஆலிம்களாகும்.
இவரின் பிள்ளைகளில் 5 பேர் ஆங்கில மொழியில் கல்வி கற்றவர்கள் என்பதும் இங்கு குறிப்பிட வேண்டிய விடயமாகும்.
இத்தனைக்கும் இவர் ஒரு ஆசிரியராகும். தற்போது ஓய்வு பெற்ற ஆசிரியராகும்.
தனது சொற்ப வருமானத்துக்குள் மார்க்கப் பிரச்சாரப பணியையும் செய்து கொண்டு தனது பிள்ளைகளை எப்படி வளர்த்துள்ளார் என வியந்து பார்க்க வைக்கிறது
மற்றவர்களுடன் அன்பாக பண்பாக பழகும் இவர் சிரித்த முகத்துடன் பேசுவார்.
காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமாவின தலைவர் மெளலவி ஹாறூன் இவருடைய சகோதரராவர்.
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி.