Ads Area

சாய்ந்தமருது அல்- ஹிலாலில் நிகழ்ந்த தலைமைத்துவப் பயிற்சிப் பாசறை.

(எம்.எஸ்.எம். ஸாகிர்)

சாய்ந்தமருது அல்- ஹிலால் வித்தியாலயத்தில் தரம் 8, 9 மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட தலைமைத்துவப் பயிற்சிப் பாசறை அண்மையில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். பைசால் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வானது பாடசாலை ஆசிரியர் கே.எம். நாஸரின் ஒரு செயற்றிட்டமாகும். இதில் பாடசாலை பிரதி அதிபர் எம்.சி.என். றிப்கா, உதவி அதிபர் எம்.எச். நுஸ்ரத் மற்றும் ஆசிரியர் எம்.எஸ்.எஸ். சிப்லி, நுஸ்கி ஆகியோர் கலந்து கொண்டனர்.


இதில் மாணவர்களுக்கான வீதி ஒழுங்கு மற்றும் ஏனைய சட்டங்கள் பற்றி பொலிஸ் சாஜன் ஏ.எல். ஹிதாயதுள்ளா 65832 மற்றும் எச்.ஆர்.எஸ். டபிள்யு. குமார - பொலிஸ் கான்ஸ்டபிள் 46382 ஆகியோர் விரிவுரை நடாத்தினர்.

மேலும் மாணவர்களின் ஒழுக்க விழுமியங்கள் பற்றி தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் ஏ.ஆர்.எம். அன்சார் பயிற்சி நடாத்தினார்.

மாணவர்களுக்கான உணவுப்பழக்க வழக்கங்கள் பற்றியும் சத்தான உணவின் அவசியம் பற்றியும் தொற்றா நோய்கள் தொடர்பாகவும் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வைத்தியர் ஏ.எச்.எம். திலீப் மபாஸ் விரிவுரையாற்றினார்.


இறுதியாக மாணவர்களுக்கான தலைமைத்துவ செயற்பாடுகள் தொடர்பாக தென்கிழக்கு பல்கலைக்கழக கலைத்துறைப் பீடாதிபதி டாக்டர் ஏ. ரமீஸ் பயிற்சி அளித்தார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe