சிரிலங்கா முஸ்லிம் காங்ரஸில் இருந்து பிரிந்த ஹசன் அலி மற்றும் பசீர் சேகு தாவூத் ஆகியோரினால் ஆரம்பிக்கப்பட்ட ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் இறக்காம பிரதேச அமைப்பாளராகவும், அக் கூட்டமைப்பின் உயர்பீட உறுப்பினராகவும் இருந்த சட்டத்தரணி கே.எல். சமீம் அவர்கள் தான் வகித்த அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
தனது சுய விருப்பின் பேரிலேயே தான் அனைத்துப் பதவிகளையும் ராஜினாமா செய்ததாக அறிவித்துள்ளார்.