காமிஸ் கலீஸ்
(மருதமுனை) கொரோனா (கோவிட்-19) வைரஸ் தாக்கமானது சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள பதிப்புக்கள் தொடர்பாகவும் அப் பாதிப்புகளில் இருந்து மீளெழுவதற்கான மருத்துவம், ஜீவனோபாயம் மற்றும் சமூகம் சார்ந்த முயற்சிகள் தொடர்பாகவும் எதிர்காலங்களில் இவ்வாறான அசாதாரண நிலைமைகளின் போது கடைப்பிடிக்கப்படவேண்டிய முறைமைகள் தொடர்பாகவும் பிரதேச வாரியான அத்தியாவசிய தீர்மானகளினை மேற்கொள்வதற்காக மருதமுனை அகாஸ் அமைப்பினரின் முயற்சியில் கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இன்று (26/03/2029) காலை 11 மணிக்கு மருதமுனை பொதுநூலக கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கலந்துரையாடல் நிகழ்வில் மார்க்க அறிஞர்கள், பள்ளிவாசல் நிருவாகத்தினர், வைத்திய ஆலோசகர்கள், பல்துறைசார் புத்திஜீவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இம் முன்னெடுப்பின் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக ஊரடங்கு நடவடிக்கைகள் காரணமாக சமூகத்தில் எழுந்திருக்கும் ஜீவனோபாய சவால்களை ஈடு செய்யும் சமூக உதவிகளை வழங்கும் செயற்பாடுகளை நிறைவேற்றவும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.