ஒரு நாட்டை ஆள்வதற்குரிய எல்லா அரசியல் அதிகாரங்களும் நாட்டின்
குடிமக்களுக்கே இருக்கும் என்பது குடியரசின் தத்துவம்.
குடிமக்கள் தமக்கான அரசியல் அதிகாரத்தை வாக்குரிமை மூலம் செலுத்தி தங்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து, தங்கள் சார்பில் அரசை நடாத்திவர அவர்களுக்கு அதிகாரம் அளிக்கின்றனர். எனவே, மக்களாட்சி நடைபெறும் நாடுகளில் தேர்தல் என்பது மிக இன்றியமையாத ஒன்றாகும்
முஸ்லிம் சமூகத்திற்கு இக்கட்டான தருணம், இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கான தேர்தல் இது, அனுபவமுள்ளவருக்கு வாக்களிப்போம், பேச்சாற்றல் மிக்கவரை தேர்வு செய்வோம் என்றொறு கூட்டமும் முன்னாள் அமைச்சர், முன்னாள் ஆளுநர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்றவாறான ஜனநாயக கலைச்சொற்களை தூக்கிக்கொண்டும் ஒரு கூட்டமும்
ஊருக்கென்று ஒரு MP, எமது ஒழுங்கைக்கு ஒரு Mp எனும் பிரதேசவாத பேச்சுக்களுடன் சில கூட்டமும் இன்னும் சில தினங்களுக்குள் வீட்டுக்கதவை தட்டும்
ஆடம்பர கார்களும் சொகுசு பங்களாக்களும் அளவுக்கு விஞ்சிய பணமும், அதிகார திமிறுகளுமே இவ்வாறானவர்களிடம் மலிந்து காணப்படுகிறது. போதாக்குறைக்கு பிள்ளைகளின் பெயரில் சொத்துக்கள் உறவினர்களின் பெயரில் காணிகள் வெளிநாட்டு வங்கிகளில் பத்திரமாக சொரண்டிய பணங்கள்.
சமூகத்தின் பெயரால் உழைத்துக்கொண்ட இவர்கள் சமூகத்திற்காக உழைக்க தவறிவிட்டனர் என்பதே உண்மை.
முஸ்லிம்கள் தற்போது எந்தக் கட்சியையும் நம்பி பலனில்லை, எந்தக் கட்சியில் ஊழலற்ற நேர்மையான இளம் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளார்கள் என்பதை மட்டும் இனங்கண்டு அந்த கட்சிக்கு வாக்களிப்பதே இந்த நாட்டிற்கு நாம் செய்யும் மிகப்பெறும் உபகாரமாகும்.
இளைஞர்கள் அனுபவமில்லாதவர்கள், புதியவர்கள் ஆளுமையற்றவர்கள் , பக்குவமற்றவிதமாக பேசக் கூடியவர்கள் என்றெல்லாம் விமர்சனங்கள் எழும், இதையெல்லாம் கண்டுகொள்ள தேவையில்லை, வாய்ப்புக்களை வழங்காமல் எவரையும் விமர்சிப்பதில் அர்த்தமில்லை என்ற பதிலை அவர்களுக்கு வழங்குங்கள்.
மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் சுயநலமாக செயற்படும் ஒவ்வொரு அரசியல்வாதியும் புறக்கணிக்கப்படவேண்டியவர்கள் என்பதை நினைவில் கொள்வோம். அதற்கு இதுவே தருணம் என்பதையும் மனதில் கொள்வோம்.
கட்டுரையாளர்
Feroz Mohamed