Ads Area

சம்மாந்துறை வைத்தியசாலையின் முன்மாதிரி ; நோயாளிகளுக்கான மருந்துகளை அவர்களது வீடுகளுக்கு சென்று வழங்க நடவடிக்கை.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை விடுக்கும் கிளினிக் நோயாளர்களுக்கான அறிவித்தல்.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை கிளினிக்களில் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று தற்போதைய சூழ்நிலை காரணமாக கிளினிக்களுக்கு வர முடியாத வயது முதிர்ந்தவர்கள், உளநோயாளர்கள், வலது குறைந்தோர்கள் தங்களது பெயர், விலாசம், கிளினிக் விபரம், தொலைபேசி இலக்கம் போன்றவற்றை எமது வைத்தியசாலை தொலைபேசி இலக்கம் 0672260261 அல்லது தாதிய பரிபாலகர் 0773619661 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொண்டால் தங்களுக்குரிய மருந்துகளை தங்களது வீடுளுக்கு வந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மகிழ்வுடன் அறியத் தருகின்றேன்.


குறிப்பு -  இச் சேவையினை தவறாக பயண்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.

இப்படிக்கு

வைத்தியர் - எம்.எச்.எம். அஷாத்.
வைத்திய அத்தியட்சகர்
ஆதார வைத்தியசாலை
சம்மாந்துறை









Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe