(எம்.எம்.ஜபீர்)
சம்மாந்துறை நகரில் கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுக்கும் நோக்கில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதை அடுத்து வர்த்தகர்களும், பொது மக்களும் அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு விதிகள் குறித்து தெளிவூட்டப்பட்டது.
சம்மாந்துறை பிரதேச சபை, சம்மாந்துறை பிரதேச செயலகம், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பொலிஸ் மற்றும் இராணுவம் ஆகிய இணைந்து இவ்வேலைத்திட்டதினை முன்னெடுத்தனர்.
இன்று காலை 6.00 மணி தொடக்கம் மதியம் 2.00 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதை அடுத்து நகரில் திரளான மக்கள் அத்தியவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக் ஹிஜ்ரா பொது சந்தை மற்றும் வியாபார தளங்களுக்கு வருதந்தவர்களுக்கு மாஸ்க் பயன்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டதுடன் சன நெரிசலாக காணப்பட்ட பிரதேசத்தினை நெரிசலை குறைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.