Ads Area

சவுதி அரேபியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஒருவர் மரணம்.

உலகை ஆட்கொண்டு உயிரிழப்புக்களை ஏற்படுத்தி வரும் கொவிட் - 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஒருவர்  சவுதி அரேபியாவில்  மரணமடைந்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு இலக்காகி மரணமடைந்தவர் ஆப்கான் நாட்டைச் சேர்ந்தவராவர்.

வளைகுடா நாடுகளிலும் ஆட்கொண்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுக்கு சவுதி அரேபியாவில் இதுவரை 767 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர் அவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்ற வேளை 28 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளனர்.

கொரோனா தொற்றின் தீவிரத்தை தடுக்க சவுதி அரேபியால் தற்போது 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு நாளும் மாலை 7 மணி இருந்து காலை 6 மணி வரை இவ்வூரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

செய்தி மூலம் - http://www.saudigazette.com.sa
தமிழ் - சம்மாந்துறை அன்சார்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe