(எம்.எம்.ஜபீர்)
கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து சம்மாந்துறை பிரதேச மக்களை பாதுகாக்கும் நோக்கில் நாட்டில் அமுப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் தளர்தப்பட்டதைத் தொடர்ந்து சம்மாந்துறை இருட்டு வட்டம் நண்பர்கள் அமைப்பு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்துடன் இணைந்து பொது மக்களை விழிப்பூட்டும் வேலைத்திட்டத்தினை இன்று முன்னெடுத்தனர்.
சம்மாந்துறை இருட்டு வட்டம் நண்பர்கள் அமைப்பின் தலைவர் சட்ட முதுமாணி எம்.ஏ.எம்.லாபீர் தலைமையில் நடைபெற்றஇவ் விழிப்புணர்வு வேலைத்திட்டத்தில் அமைப்பின் உறுப்பினர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.