19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைய, பாராளுமன்ற ஆயுட்காலம் நான்கரை வருடங்களை கடந்த பின்னர் அதனை கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.
அதனடிப்படையில் பாராளுமன்றத்தின் ஆயுட் காலம் முடிவடைந்துள்ள நிலையில் எந்த வேளையிலும் பாராளுமன்றத்தை கலைக்கும் இயலுமை ஜனாதிபதிக்கு உள்ளது அவ்வாறு பாராளுமன்றம் கலைக்கப்படுமானால் 68 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் இல்லாமல் போகும். 5 வருட உத்தியோகப்பூர்வ காலத்தை நிறைவு செய்யாமையின் காரணமாகவே இந்த வரப்பிரசாதம் இல்லாமல் போகின்றது.