டெல்லியில் உள்ள ஏழை மக்களுக்கு கோதுமை மாவில் 15 ஆயிரம் ரொக்கத்தை மறைத்து வைத்து நடிகர் அமீர்கான் விநியோகித்ததாக வீடியோ பரவி வருகிறது.
கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஏழை எளிய மக்கள் வேலையின்றி உணவு கிடைக்காமல் அவதியுற்று வருகின்றனர்.
ஆனால் அது வெறும் அறிவிப்போடு மட்டும் இருப்பதால் தன்னார்வலர்கள் பலர் ஏழை எளியோருக்கு தங்களால் ஆன உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகளைச் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள சில பகுதிகளில் கடந்த ஏப்ரல் 23ம் தேதி, ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்காக வழங்க ஒரு கிலோ கோதுமை மாவு கொண்ட பார்சல் நிறைந்த லாரி வந்திறங்கியது.
அதனை சிலர் வாங்க மறுத்தனர். ஆனால், ஏழை மக்கள் பலர் அந்த கோதுமை மாவு பார்சலை வாங்கிச் சென்றனர். கோதுமை மாவு பொட்டலங்களை வாங்கியவர்கள் வீட்டுக்குச் சென்று அதனைத் திறந்து பார்த்ததும் அதில் 15 ஆயிரம் ரூபாய் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அடைந்திருக்கின்றனர்.
ஆனால், அந்த டிக்டாக் வீடியோவை வெளியிட்டவர் அமீர்கான் தரப்பைச் சேர்ந்தவரா அல்லது பயனாளியா என்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வமான தகவலும் இல்லை.
அதேபோல, அமீர்கான் தரப்பும் இந்த 15 ஆயிரம் ரூபாய் பணம் வைத்து கோதுமை மாவு விநியோகித்தது தொடர்பாக எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.