கர்நாடாக மாநிலத்தில் ஏழைகளுக்கு உணவு வழங்குவதற்காக தங்களது சொந்த நிலத்தை இஸ்லாமிய சகோதர்கள் விற்றுள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் தீவிரமாக அதிகரித்துள்ளது. இந்தக் கொரோனா பாதிப்பு காரணமாக இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவு நாடுமுழுவதும் அமலில் உள்ளது.
அந்த வகையில் கர்நாடாக மாநிலத்தில் ஏழைகளுக்கு உணவு வழங்குவதற்காக தங்களது சொந்த நிலத்தை இஸ்லாமிய சகோதர்கள் விற்றுள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க ஆளும் கர்நாடாக மாநிலத்தில் ஏழைமக்களுக்கும் தெருவோர மக்களுக்கும் அரசு போதிய நிவாரணம் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் கோலார் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய சகோதர்கள் தாஜாமுல் பாஷா, முசாமில் பாஷா.
கையில் இருந்த பணத்தை வைத்து முடிந்தவரை உதவி செய்துவந்த சகோதரர்கள் பணம் தீர்ந்ததும் அவர்களுக்கு சொந்தமான இடத்தை ரூ. 25 லட்சத்துக்கு விற்று, ஏழைகளுக்கு உணவளித்து வருகின்றனர். இந்தப் பணத்தைக் கொண்டு மளிகைப் பொருட்கள் வாங்குவது, அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவது, ரேஷன் பொருட்கள் வாங்கி கொடுப்பது, வீட்டு வாசலில் உணவு கொண்டு போய் சேர்ப்பது என்று சேவை புரிந்து வருகின்றனர்.
இதுதொடர்பாக தஜாமுல் பாஷா பேசுகையில், “என்னுடைய ஐந்து வயது பெற்றோரை இழந்த நிலையில் பாட்டியுடன் கோலார் வந்தோம். பாட்டிதான் கவணித்துவந்தார். வறுமையால் 3ம் வகுப்போடு படிப்பை பாதியில் நிறுத்தினோம். அதன்பின், அங்குள்ள மசூதியில் வளர்க்கப்பட்டோம்.
ரியல் எஸ்டேட்அதன்பின், அங்குள்ள வாழை மண்டியில் வேலை பார்த்து வந்தேன். 30 வயதுக்குப் பிறகுதான், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடத் துவங்கினோம். கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் ஏழைகளுக்கு உணவு கிடைக்கவில்லை என்று அவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் விபரீதங்கள் ஏற்படும்.
ஆதலால், அவர்களது வீட்டு வாசலுக்கே மாளிகைப் பொருட்கள், உணவு, அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகிறோம். நாங்கள் அனைதையாக இருந்தபோது அந்த இடத்தில் இருந்த இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் எங்களுக்கு உணவு கொடுத்து உதவினர்.
இவர்களது சேவை மன்பபான்மையைப் பார்த்து பலரும் ஏழைக்களுக்கு உதவ முன் வந்துள்ளனர். இதுவரை இந்த சகோதர்கள் 12,000 பேர் கொண்ட 2,800 குடும்பங்களுக்கு உணவு மற்றும் இலவசமாக மளிகைப் பொருட்கள் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.