சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை முழுமையான கட்டுப்பாட்டுக்குல் கொண்டு வரும் முகமாக சவுதி அரேபிய அரசு சவுதியில் உள்ள பல நகரங்களில் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இதற்கமைய Riyadh, Dammam, Khobar, Jeddah, Hofuf, Qatif, Taif, Tabuk, Dhahran, Makkah, Madina போன்ற நகரங்களில் மறு அறிவித்தல் வரும் வரை இன்று முதல் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் றியாத் போன்ற நகரங்களில் பகல் 3 மணியிலிருந்து காலை 6 மணி வரை விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு நேரம் மாற்றப்பட்டு இன்று முதல் 24 மணி நேரமாக மாற்றப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2605 பேராக உயர்ந்துள்ளது 38 பேர் வரை மரணமடைந்துள்ளனர்.
சவுதியில் வசிக்கும் இலங்கையர்கள் தாங்கள் தாங்கள் வசிக்கும் ஊர்களில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவினை மதித்து செயற்படும் படியும், அவதானமாக இருந்து கொள்ளும் படியும் சம்மாந்துறை24 இணையத்தளம் கேட்டுக் கொள்கிறது.