கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் காட்டுத்தீ போன்று பரவி வருகிறது. தற்போது அமெரிக்காவில் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்குகிறது.
இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளை ஆட்டிப்படைத்துவிட்டு தற்போது இங்கிலாந்தில் உச்சத்தை தொட்டுள்ளது.
அதேபோல்தான் சவுதி அரேபியாவில் இதுவரை 2795 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த சில வாரங்கள் மிகவும் கடுமையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் இரண்டு லட்சம் பேர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக சவுதி அரேபியாவின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் சவுதி அரேபியால் பெரும்பாலான நகரங்களில் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே புனித நகரமான மெக்கா மற்றும் மதினா ஏற்கனவே மூடப்பட்டுள்ளன.