தற்போது வெளியாகியுள்ள க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் மீள் திருத்தம் செய்வதாயின், பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அதற்காக விண்ணப்பிக்க முடியுமென, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை பெறுபேறுகளில் ஏதேனும் சிக்கல் காணப்படுமாயின், 011 27 84 208, 011 27 84 537, 011 31 88 350 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்புகொள்ள முடியும். அத்தோடு, 1911 எனும் இலக்கம் மூலமும் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை 10,346 மாணவர்கள் 09 ஏ சித்திகளை பெற்றுள்ளதாகவும், பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.