இறுதி யுத்த வடுக்களோடு பரீட்சைக்கு தோற்றிய மாணவிகள் சாதாரண தரப் பரீட்சையில் படைத்த சாதனை !
நேற்றைய தினம் (27) வெளியான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் முல்லைத்தீவு முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாற்று திறனாளி மாணவிகளான செல்வி பவதாரணி கெங்காதரன், செல்வி விதுர்சிகா மதியழகன் ஆகியோர் சிறந்த பெறுபேற்றைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இவர்கள் இருவரும் தங்களது ஆறாவது வயதில் எறிகணை தாக்குதலாலும் , துப்பாக்கி சூட்டினாலும் காயமடைந்து முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு வடுக்களை சுமந்து, வலிகளை தாண்டி சக்கர நாற்காலியில் பாடசாலை சென்று சாதரண தரப் பரீட்சையில் சாதித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முள்ளியவளை பகுதியில் வசித்து வருகின்ற செல்வி பவதாரணி கெங்காதரன் என்ற மாணவி இறுதி யுத்தத்தின் போது எறிகணை தாக்குதலில் தனது தந்தையாரை இழந்த நிலையில் அதே சம்பவத்தில் முள்ளந்தண்டில் படுகாயமடைந்து முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு நடக்கமுடியாத நிலையில் உடலில் குண்டு சிதைவுகளோடு வாழ்ந்து வருபவர் 8 ஏ , பி சித்தி பெற்று சாதனை படைத்துள்ளார்.
வீரகேசரி.