(காரைதீவு நிருபர் சகா)
க.பொ.த (சா.த) -2019 பரீட்சைப் பெறுபேற்றின் அடிப்படையில் சம்மாந்துறை கல்வி வலயம் அகில இலங்கை மட்டத்தில் 83ஆம் இடத்தினையும் கிழக்கு மாகாணத்தில் 12 ஆம் இடத்தினையும் பெற்றுள்ளது.
மேலும் கடந்த வருடத்தை விட தேசிய ரீதியில் 10 இடங்கள் முன்னேறி காணப்படுகிறது. மாகாண ரீதியில் கடந்த வருடத்தை விட 3இடங்கள் முன்னேறி காணப்படுகிறது
இப் பெறுபேற்றினை பெற்றுகொள்வதற்காக அல்லும் பகலும் உழைத்த மாணவர்கள் ஆசிரியர்கள் அதிபர்கள் சேவைக் கால ஆசிரிய ஆலோசகர்கள் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் கல்விசார் கல்விசாரா உத்தியோகத்தர்கள் பெற்றோர்கள் அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் எனது உளப்பூர்வமான நன்றிகளையும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன் என சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் தெரிவித்தார்.