அமெரிக்காவில் இறுதி சடங்கு கூடத்தில் அசந்து தூங்கியவரை இறந்தவர் என்று தவறாக நினைத்து தகனம் செய்துள்ளனர்.
கொரோனா வைரஸால் அமெரிக்காவில் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் இதுவரை 22 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். நியூயார்க் மாகணம்தான் அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.
நியூயார்க்கில் கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இறுதி சடங்கு கூடத்தில் சடலங்கள் குவிந்து வருகிறது. நியூயார்க் இறுதி சடங்கு கூடம் ஒன்றில் வேலைபார்க்கும் 48 வயதான மைக்கேல் ஜோன்ஸ் 16 மணி நேரம் தொடர்ச்சியாக வேலைப் பார்த்து உள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மைக்கேல் உடன் பணியாற்றும் சகப்பணியாளர் ஆன்டர்சன் கூறுகையில், “மைக்கேல் உயிருடன் எரியூட்டப்பட்டப் போது அவர் வெப்பம் காரணமாக அலறி உள்ளார். சத்தம் எங்கே இருந்து வருகிறது என்று கண்டுபிடிப்பதற்குள் அவர் சாம்பாலாகி விட்டார்.
1400 முதல் 1800 ஃபெரான்ஹிட் வெப்பத்தின் காரணமாக அவர் 15 நொடிகளில் உயிரிழக்க நேரிட்டது. அவரை எரியூட்ட எடுத்த வந்தவர் புதிதாக வேலையில் சேர்ந்தவர்“ என்றார்.
நியூயார்க் போலீசார் மைக்கேல் உயிரிழப்பு தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனாவிற்கு மத்தியில் இடைவிடாமல் பணியாற்றியவர் உயிருடன் தகனம் செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.