Ads Area

ஊரடங்கால் சாப்பிட வழியில்லாது 5 பிள்ளைகளை ஆற்றில் வீசிய தாய்!

ஊரடங்கால் சாப்பிட வழியில்லாது 5 பிள்ளைகளை ஆற்றில் வீசி கொன்ற தாய்! இந்தியாவில் சம்பவம்.

ஊரடங்கால் சாப்பிடக் கூட வழியில்லாததால் பெற்ற தாயே தனது 5 பிள்ளைகளை கங்கை ஆற்றில் வீசிய கொடூரம் அரங்கேறியுள்ளது.

இந்தியாவில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் உத்தரபிரதேச மாநிலம் படோகி (Bhadohi) மாவட்டத்திற்குட்பட்ட ஜஹாகிரா கிராமத்தை சேர்ந்த மிர்துல் அகா முன்னாவிடம் அவரது மனைவி மஞ்சு குடும்ப செலவுக்கு பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

கணவன் மறுத்துவிட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த மஞ்சு தனது மூன்று பெண் பிள்ளைகள் மற்றும் இரண்டு ஆண் பிள்ளைகளை கங்கை ஆற்றிற்கு அழைத்துச் சென்று தண்ணீரில் மூழ்கடித்துள்ளார்.

பின்னார் தானும் தற்கொலைக்கு முயன்ற நிலையில், திடீரென மனம் மாறி கரை சேர்ந்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் கங்கை ஆற்றில் மூழ்கிய 5 பிள்ளைகளை தேடி வருகின்றனர்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe