Ads Area

ஆபிரிக்க மக்கள் மீது கொரோனா தடுப்பு மருந்து சோதனை ; கண்டனம் தெரிவித்த உலக சுகாதார நிறுவனம்.

எந்த தடுப்பு மருந்துகளுக்கும் ஆப்பிரிக்க மக்கள் சோதனை நிலமாக இருக்க முடியாது. இனிமேல் இருக்கவும் செய்யாது என்று உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ராஸ் அதான் நோம் கெப்ரியேசஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதையும் கடுமையாக சிதைத்து வரும் கொரோனா வைரஸுக்கு இதுவரையில் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போது, தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த வாரத்தில் பேசிய ப்ரெஞ்ச் மருத்துவர்கள், கொரோனா தடுப்பு மருந்துகளை ஆப்பிரிக்க மக்கள் மீது செலுத்தி சோதனை செய்யவேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தனர்.

இந்தநிலையில் ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார நிறுவன இயக்குநர் டெட்ராஸ் அதான்நோம் கெப்ரியேசஸ், ‘இது அவமான ஒன்று. 21-ம் நூற்றாண்டில் ஆய்வாளர்கள் மத்தியில் இப்படி ஒரு கருத்து வருவது மோசமானது. இந்தச் செயலை மிகக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி கண்டிக்கிறோம். நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். எந்த தடுப்பு மருந்துகளுக்கும் ஆப்பிரிக்க மக்கள் சோதனை நிலமாக இருக்க முடியாது. இனிமேல் இருக்கவும் செய்யாது. இது நடைபெறாது’ என்று கடுமையாக கண்டித்திருந்தார்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe