Ads Area

இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 124 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 4 ஆயிரத்து 789 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கொரோனாவுக்கு இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தோர் எண்ணிக்கை 353 ஆனது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 508 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe