(எம்.எம்.ஜபீர்)
அம்பாரை மாவட்டத்தில் ஊடரங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் ஓய்வூதியம் பெறும் சிரேஷ்ட பிரஜகளை இராணுவத்தினர் இலங்கை போக்கு வரத்துக்கு சபை பஸ்களின் ஊடாக வங்கிகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை அழைத்து வந்து ஓய்வூதிய பணத்தை பெற்றுக் கொள்வதற்காக ஏற்பாடுகளை மேற்கொண்டனர்
அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கமைய இராணுவத்தினால் சிரேஷ்ட பிரஜைகள் சமூக இடைவெளியை பேணி முககவம் அணிந்து பாதுகாப்பான வகையில் பஸ்களில் வங்கிகளுக்கு அழைத்து வரப்பட்டு வங்கியில் பணங்களை பெற்றுக் கொண்டு அவர்களின் தேவைகளை நிறைவேற்றியதுடன் மீண்டும் பஸ்களின் மூலம் அவர்களின் வீடுகளுக்கு கொண்டு சேர்த்தனர்.