(எம்.எம்.ஜபீர்)
சுகாதார அமைச்சின் வழிகாட்டலுக்கு அமைவாக கொவிட் 19 எனும் கொரோனா வைரஸ் தொற்றி நோயை தடுக்கும் நோக்கில் சம்மாந்துறை பிரதேச சபையும் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இணைந்து அரச அலுவலகம் மற்றும் பொது இடங்களில் தொற்று நீக்கி விசிறும் வேலைத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டது.